search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறான தகவல்கள்"

    பன்னாட்டு அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பிவந்த சுமார் 7 கோடி கணக்குகளை சமூக வலைத்தளமான டுவிட்டர் முடக்கியுள்ளது.
    நியூயார்க்:

    சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ‘ட்ரோல்’, ‘மீம்ஸ்’ என்ற போர்வையில் ஆபாசமான சித்தரிப்பும் செய்யப்படுகிறது.

    இதுபோன்ற கருத்துகளும், சித்தரிப்பும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க அரசை தாக்கும் வகையில் அமைவதாக அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

    இது, உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதைதொடர்ந்து, சர்ச்சைக்குரியதும் பெரும்பாலானவர்களால் விரும்பத்தகாததுமான கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில்  தீர்மானித்தது.

    இதன் அடிப்படையில், தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்காணிக்கவும், முடக்கவும் அதிகமான நபர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

    இதன் விளைவாக, கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலவேளைகளில், ஒரே நாளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Twittersuspends70millionaccounts  #70millionaccounts  
    ×